தள்ளிவைக்கப்பட்ட லக்கி பாஸ்கர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்.. படக்குழு வெளியிட்ட தகவல்!

vinoth
புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:11 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவான் வாத்தி படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூல் ரீதியாகக் வெற்றிப்படமாக கருதப்பட்டது.

இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்லார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடிக்கிறார். படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு ரிலீஸாகும் என படக்குழுவினரால் அறிவுக்கப்பட்டுள்ளது.  படத்தின் சில போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையாததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments