Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸான பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ திரைப்படம்!

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (15:22 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இந்த படம் வெளியான பின்னர் கார்த்தியின் மெய்யழகன் மற்றும் தேவரா போன்ற பெரிய படங்கள் ரிலீஸானாலும் இன்னமும் இந்த படத்துக்குக் கூட்டம் குறையவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது படம் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments