Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#LoveLaughterwar : சூர்யாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

Sinoj
வியாழன், 28 மார்ச் 2024 (17:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
இப்படத்தின் ஷூட்டிங்  நிறைவடைந்த நிலையில், இப்படத்திற்கு டப்பிங் பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.
 
இதனைத்தொடர்ந்து கங்குவா பட டீசர் வெளியாகி குறைந்த நேரத்தில் அதிகப் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
 
இதற்கிடையே, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த புறநானூறு படம் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் கைவிடப்பட்டது.
 
எனவே சூர்யாவின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில், சூர்யாவின் 44வது படத்தை ஜிகர்தண்டா,   பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் #LoveLaughterwar  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments