Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமாளி இயக்குனரின் அடுத்த படமான “லவ் டுடே”… யுவன் இசையில் முதல் சிங்கிள் எப்போது?

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (09:02 IST)
கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் அடுத்து கதாநாயகனாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான நகைச்சுவையான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments