Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியில் மயங்கிய ஷாலினி பாண்டே

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (16:36 IST)
விஜய் தேவரகொண்டா நடிப்பில், சந்தீப் வாங்கா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ள படம் 'அர்ஜுன் ரெட்டி'. முதலில் குறைவான திரையரங்குகளிலேயே வெளியாகி பின் ‘பப்ளிக் டாக்’ மூலம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

 
இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார் ஷாலினி பாண்டே. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன்  லிப்லாக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் ஷாலினி. தெலுங்கு தேச மக்கள் ஷாலினியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்க ஷாலினிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
 
இந்நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். ஷாலினி வருவதை அறிந்து அங்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ஏற்கெனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷாலினி தன்னைப் பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார்.
 
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்த ஷாலினி,  அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிறகு ஐதராபாத் திரும்பியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments