நடிகர் லொள்ளு சபா ஷேஷூ காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (07:41 IST)
சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் சின்னத்திரையுலகில் காமெடி தர்பார் நடத்திய லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். பல வெற்றிப் படங்களை கலாய்த்து அவர்கள் உருவாக்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்துதான் சந்தானம்,  மாறன், சேஷு, லொள்ளுசபா மனோகர், இயக்குனர் ராம் பாலா, முருகானந்த் ஆகியோர் திரைத்துறைக்குள் வந்தனர்.

இதில் ஷேஷு தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களைப் பல படங்களில் விழுந்து விழுந்து சிரிக்கவைத்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து அவர் ஏ1 மற்றும் சமீபத்தில் வந்த வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் காமெடி ரகளை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று காலமானார். இதையடுத்து அவருடன் நடித்த சக கலைஞர்களும் ரசிகர்களும் அவரின் திரைப்படக் காட்சிகளைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழக திரையரங்க விநியோகத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’!

பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!

மகுடம் படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு விலகினாரா?... உண்மையில் நடந்தது என்ன?

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments