Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரஜினி, கமல் சேர்ந்து நடிக்க ஒரு கதை ரெடி… ஆனால்” –லோகேஷ் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 12 மே 2025 (08:34 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார். இவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கூட ஆர்வமாக இருக்கிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கிய அவர், அதன் பின்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இணைத்து நடிக்கவைக்க ஒரு கதையை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். அதில் “அந்தக் கதை இரண்டு கேங்ஸ்டர்கள் பற்றிய கதை. அதை நான் ரஜினி சாரிடமும், கமல் சாரிடமும் சொல்லியுள்ளேன். இருவருமே அதற்கு நேர்மறையாக எதிர்வினையாற்றினார்கள். ஆனால் அது சம்மந்தமாக அவர்கள் என்ன முடிவு எடுக்கவுள்ளார்கள் என்பது தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments