என்னது ரஜினியின் தர்மதுரை படத்துக்கு எஸ் பி முத்துராமன் இயக்குனரா?... நேர்காணலில் உளறிய லோகேஷ்!

vinoth
வெள்ளி, 25 ஜூலை 2025 (09:15 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முன்னணி இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பழம்பெரும் இயக்குனர் எஸ் பி முத்துராமன் பற்றி பேசும்போது “எஸ் பி முத்துராமன் சார் ரஜினியை வைத்து இயக்கியதில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால் அது ‘தர்மதுரை’ மற்றும் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகிய படங்கள்தான்.” எனப் பேசினார். இதில் என்ன பிரச்சனை என்றால் ரஜினிகாந்தின் ‘தர்மதுரை’ படத்தை இயக்கியது எஸ் பி முத்துராமன் இல்லை.  தர்மதுரை படத்தை இயக்கியது அப்போது ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக இருந்த ராஜசேகர் என்பதுதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments