Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டே இல்லாம பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷா இப்படி?... ரசிகர்கள் புலம்பல்!

vinoth
வியாழன், 10 ஜூலை 2025 (08:32 IST)
ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக ‘கூலி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என  விவாதங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடும் ‘ஐட்டம் நம்பர் பாடலான மோனிகா’ நாளை வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான ப்ரோமோ நேற்று வெளியானது. தற்போது தமிழ் சினிமாவில் ஐட்டம் நம்பர் பாடல்கள் வைப்பது கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்த்தில் ‘காவாலா’ பாடல் ஹிட்டானதால் இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் ஒரு பாடல் கூட இல்லாமல் கைதி படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகக் கொடுத்த லோகேஷுக்கே இந்த நிலைமையா என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments