Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் vs கௌதம் மேனன்: ‘இந்த சண்டையில சட்ட கிழியாது’… டிவிட்டரில் ஜாலி உடையாடல்!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (07:52 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் டிஜிட்டலில் புத்துருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது.

இந்நிலையில் எதிர்பார்த்தததை விட வேட்டையாடு விளையாடு படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. சென்னையில் இரண்டாவது வாரத்திலும் வார இறுதி நாட்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக இந்த படம் ஓடுவதாகக் குறிப்பிட்டு ஒரு ரசிகர் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.

மேலும் அந்த ட்வீட்டில் “எனக்கென்னவோ ஆண்டவரின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குனர் யார் என்ற சண்டையில் முதலிடம் பிடித்தது கௌதம் மேனன் சார்தான் என்று நினைக்கிறேன்.” எனக் கூறி அதில் லோகேஷை டேக் செய்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இயக்குனர் லோகேஷ் “சந்தேகமே வேண்டாம் கண்டிப்பார் கௌதம் மேனன் சார்தான்” எனக் கூறியிருந்தார்.

லோகேஷின் இந்த கமெண்ட்டுக்கு பதிலளித்த கௌதம் மேனன் “ஒருகாலத்தில் நான் இருந்தேன். ஆனால் உங்களுடைய விக்ரம் படம் வரும் வரை. இப்போது போட்டி கடினமாகி விட்டது.  இப்போது நான் மேலும் முயற்சி செய்து அதைத் தாண்டி செல்லவேண்டும். அது ஒரு நல்ல சவாலாக இருக்கும்.  ஆனா இந்த சண்டையில சட்ட கிழியாது. அன்பு மட்டுமே” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments