‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

Bala
புதன், 26 நவம்பர் 2025 (19:33 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சான். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக வெளியானது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படத்தை லிங்குசாமி இயக்கினார். படம் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்த நிலையில் ரிலீசுக்கு பிறகு மோசமான விமர்சனத்தை இந்தப் படம் எதிர்கொண்டது. ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது லிங்குசாமி பேசிய பேச்சு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது.
 
அப்படியே கங்குவா திரைப்படத்தில் என்னெல்லாம் உருட்டினார்களோ அப்படித்தான் லிங்குசாமியும் அஞ்சான் திரைப்படத்தை பற்றி பெரிய அளவு உருட்டினார் என்று சொல்லலாம். ஆனால் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனத்தையே பெற்றது. அது மட்டுமல்ல ட்ரோலுக்கு முதன் முதலில் வித்திட்ட படமாகவும் அஞ்சான் திரைப்படம் உருவானது. மீம்ஸ், ட்ரோல் என அஞ்சான் திரைப்படத்தை நெட்டிசன்கள் வச்சு செய்தனர்.
 
இந்த நிலையில் சமீபகாலமாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். கடந்த வாரம் விஜய் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த பிரெண்ட்ஸ் திரைப்படத்தை ரீரிலீஸ் செய்தனர். அது மட்டுமல்ல விஜயின் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகி மீண்டும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அஞ்சான் திரைப்படத்தையும் ரீ ரிலீஸ் செய்கிறார் லிங்குசாமி. அந்த படம் நாளைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது .ஆனால் படத்தில் சில பல மாற்றங்களை செய்து ஒரு புதிய வெர்சனாக ரீ ரிலீஸ் செய்கிறார் லிங்குசாமி.
 
படத்தின் ஒரிஜினல் வெர்சனில் இரண்டரை மணி நேரம் 30 நிமிட காட்சிகள் இருக்குமாம். ஆனால் புதிய வெர்ஷனில் 2 மணி நேர காட்சிகள் மட்டும் இருக்கிறதாம். அதுமட்டுமல்ல முதல் வெர்சனில் சூரி நடிக்கும் சில காட்சிகள் இருக்கும். புது வெர்ஷனில் சூரியின் காட்சிகளே இல்லை. வெறும் சூர்யா மட்டும்தான் என்று கூறி இருக்கிறார்.ரீ ரிலீஸ் பற்றி சூர்யா எதுவும் சொன்னாரா என்ற கேள்விக்கு சிவக்குமாரிடம் கூறினேன். சிவகுமாரும் அவருடைய மனைவியும் படத்தை வந்து பார்த்தார்கள்.
 
சூர்யாவிடம் பேசி இருக்கிறேன். அவர் தற்போது ஊட்டியில் இருக்கிறார். அங்கிருந்து வந்த பிறகு படத்தை பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் என லிங்குசாமி கூறினார். சமீபகாலமாக விஜயின் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகும் நிலையில் இப்போது சூர்யாவின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை வருங்கால அரசியலில் இருவரும் கூட்டணி வைக்க நீங்கள் பிள்ளையார் சுழி போடுகிறீர்களா என்ற கேள்விக்கு மேடையிலேயே கடுப்பாகி அஞ்சான் திரைப்படத்தை மட்டும் பற்றி கேள்வி கேளுங்கள் என கூறிவிட்டார் லிங்குசாமி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments