தொடங்கியது லிங்குசாமியின் பையா 2 வேலைகள்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (07:07 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது.

பின்னர் கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து பையா 2 கதையை விவரித்ததாகவும், அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கார்த்தி, ஆர்யா இருவருமே அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது பையா 2 திரைப்படத்துக்கான திரைக்கதைக்கான வேலைகளை லிங்குசாமி தனது குழுவினரோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments