Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த தகவல்: ஹீரோ இவர்தான்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (21:05 IST)
ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது 
 
இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் லிங்குசாமியின் படம் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments