Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு - புலியை பாராட்டிய லிங்குசாமி

பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு - புலியை பாராட்டிய லிங்குசாமி
, சனி, 3 அக்டோபர் 2015 (11:36 IST)
தமிழ் சினிமாக்காரர்களைப் போல் நாகரிகம் தெரிந்தவர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். உலகமே கழுவி ஊற்றும் படத்தைப் பற்றி கேட்டாலும், அடடே, அந்தப் படமா? ரொம்ப நல்ல படமாச்சே என்பார்கள் பவ்யமாக. இதெல்லாம் கேமராவுக்கு முன்னால்தான். இருந்தாலும், அப்படி சொல்லவும் ஒரு மனசு வேண்டுமல்லவா?

புலி படம் குறித்து வரும் விமர்சனங்களை இப்போது உலகமே அறிந்திருக்கும். படம் பார்த்தவர்களின் இரண்டரைமணிநேர அனுபவமும் தமிழக மக்களை அடைந்திருக்கும். இந்நிலையில், லிங்குசாமி புலியைப் பார்த்துவிட்டு விஜய்யையும், சிம்புதேவனையும் புகழ்ந்திருக்கிறார்.

இதுவரை தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் நடித்து வந்த விஜய், இந்தப் படத்தில் குடும்பத்தோடு குழந்தைகளும் கண்டு களிக்கும் வகையில் நடித்துள்ளார். படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது என பாராட்டியுள்ளார்.

லிங்குசாமிக்குதான் என்னவொரு குழந்தை உள்ளம்.

Share this Story:

Follow Webdunia tamil