Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கடாசலபதி புகைப்படத்தில் இருப்பது ரஜினி முகமா? ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2014 (12:28 IST)
லிங்கா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் அதனை பார்த்து பாராட்டி வருகின்றனர். இளமையான ரஜினி என்று அனைவரும் பாராட்டி வரும் நிலையில், வெங்கடாசலபதி படத்திலும் அவரது முகம்தான் இருக்கிறது என புது பூதத்தை கிளப்பியுள்ளார்கள் இணையத்தில்.
 
ட்ரெய்லரின் ஆரம்பத்தில் லிங்காவை தயாரித்திருக்கும் வெங்கடேஷின் ராக்லைன் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பெயரும் எம்பளமும் வருகிறது. எம்பளத்தில் இருப்பது திருப்பதி வெங்கடாசலபதியின் படம். ரஜினியின் முகத்தைதான் வெங்கடாசலபதியின் முகமாக வைத்திருக்கிறார்கள் என சிலர் கூற, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
எம்பளத்தில் வரும் வெங்கடாசலபதியின் முகம் ரஜினி முகம் போலவே உள்ளது. இதை வைத்து யாரேனும் பிரச்சனையை கிளப்புவார்களோ என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அதேநேரம், ராக்லைன் நிறுவனம் இந்த எம்பளத்தை இதற்கு முன்பே பயன்படுத்தி வருகிறது. ரஜினிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மஞ்சள்காமலை வந்தவனுக்கு எல்லாம் மஞ்சளாக தெரிவது போல் இது ரஜினிகாமாலை என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
 
காய்த்த மரமானாலும் கல்லடிக்காமல் விடமாட்டாங்களே.

ரஜினியின் ’கூலி’ படத்தில் சத்யராஜ் நடிப்பது கன்பர்ம்.. என்ன கேரக்டர் தெரியுமா?

சரத்குமார் படங்களை இயக்குனர் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

வாழ்நாளில் சில பாத்திரங்கள்தான் இப்படி அமையும்… 18 ஆண்டுகள் நிறைவு செய்த புதுப்பேட்டை குறித்து தனுஷ்!

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

Show comments