Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5000 திரையரங்குகளில் லிங்கா - இன்னொரு சாதனைக்கு தயாராகும் தயாரிப்பாளர்

5000 திரையரங்குகளில் லிங்கா - இன்னொரு சாதனைக்கு தயாராகும் தயாரிப்பாளர்
, புதன், 26 நவம்பர் 2014 (20:18 IST)
லிங்கா சென்சாரில் யு சான்றிதழ் பெற்று டிசம்பர் 12 ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. லிங்காவின் வியாபாரம் ஒவ்வொன்றும் சாதனை படைத்துக் கொண்டிருக்க திரையரங்கு எண்ணிக்கையிலும் புது சாதனையை நோக்கி லிங்கா பயணப்படுகிறது.
 

 
இதுவரை ஹிர்த்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படம் மட்டுமே 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. அந்த சாதனையை லிங்கா சமன் செய்ய உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 5000 திரையரங்குகளில் லிங்காவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
 
யுஎஸ்ஸில் 200 திரையரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அங்கு இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாகப் போகும் தென்னிந்திய படம் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil