Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்ஷா லுக்கில் லிங்கா ரஜினி

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (12:14 IST)
லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஷிமோகா மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லிங்கனமக்கி அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் படப்பிடிப்பு தடைபட்டது. பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த அதிகாரிகள் வந்த பிறகே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.
ஆனால், பிரச்சனை அத்துடன் முடியவில்லை. அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது, அணைப் பகுதிகளில் எடுத்த காட்சிகளை அழிக்க வேண்டும் என கர்நாடக முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
 
நிற்க. ஒருபுறம் பிரச்சனைகள் நடந்தாலும் படம் குறித்து வந்துள்ள இன்னொரு செய்தி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டக் கூடியது. பாட்ஷாவில் வரும் ரஜினியின் தாடி கெட்டப்பை பார்த்தாலே ரஜினி ரசிகர்களுக்கு நாடி நரம்பு புடைக்கும். அந்த கெட்டப்பை லிங்கா படத்துக்காக போட்டுள்ளார் ரஜினி.
 
இந்த கெட்டப் படம் நெடுக வருமா இல்லை சில காட்சிகள் மட்டும்தானா என்பது தெரியவில்லை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments