Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளியை துரத்திப் பிடிக்கும் விஜய், சூர்யா, அஜித்

தீபாவளியை துரத்திப் பிடிக்கும் விஜய், சூர்யா, அஜித்
, வியாழன், 27 அக்டோபர் 2016 (16:17 IST)
படம் வெளியாகலைன்னா என்ன... பர்ஸ்ட் லுக்காவது வெளியிடுவோம் என்ற ஆவேசத்தில் இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள். இப்படி போஸ்டர், பர்ஸ்ட் லுக் என்று அவ்வப்போது தீனி போடவில்லை என்றால், அஜித் ரசிகர்களைப் போல் துக்க தீபாவளி போஸ்டர் ஒட்டிவிடுவார்கள்.

 
சூர்யா நடித்த படம் எதுவும் தீபாவளிக்கு இல்லை. அதனால், வரப்போகிற எஸ் 3 படத்தின் மோஷன் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிடுகின்றனர். விஜய் படமும் இந்த தீபாவளிக்கு இல்லை. அதனால் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் பைரவாவின் டீசர் மற்றும் ஒரு பாடலை தீபாவளிக்கு வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.
 
அஜித் தரப்பிலிருந்து வழக்கம் போல் ஆழ்ந்த மௌனம். வெறுத்துப்போன மதுரை ரசிகர்கள் இது எங்களுக்கு துக்க தீபாவளி என்று போஸ்டர் ஒட்டினர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா அஜித்...?
 
அதேநேரம் அஜித் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் அஜித்தைப் போல் தேமே என்று இருக்க முடியாதே... சிவா இயக்கிவரும் அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்கள்.
 
முதலில் படத்தின் பெயரை வெளியிடுங்கப்பா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரசிவாஜி முதலில் வரும் - விக்ரம் பிரபு தகவல்