Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தேவரகொண்டா & மைக் டைசன் நடிக்கும் ‘லைகர்’… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (09:18 IST)
லைகர் படத்தின் டிரைலர் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இதையடுத்து தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை 21 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்காக ஐதராபாத் மற்றும் மும்பை அந்தேரி ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் நடக்கும் இரண்டு நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் இட்லி கடை பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்… காரணம் என்ன?

கம்பேக் கொடுக்க மார்க் ஆண்டனி 2 எடுக்க விரும்பும் விஷால்.. சம்மதிப்பாரா ஆதிக்?

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments