எல் ஐ சி படத்தில் இருந்து வெளியேறினாரா ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்?

vinoth
சனி, 29 ஜூன் 2024 (11:40 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments