Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது டிவிட்டர் கணக்கை விட்டுவிடுங்கள்; ஹேக்கர்களிடம் கெஞ்சும் சுசித்ரா!

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (11:02 IST)
கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கில் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஹன்சிகா,  ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் வரக்கூடிய டிவீட்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையாகவும், அதிர்ச்சி  அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவுகள் இருந்தது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன் டிவிட்டர் கணக்கை தயவு செய்து நிறுத்தி கொள்ளுமாறும் பாடகி சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
“இந்த பிரச்சனைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் சூழலிலும் நான் இல்லை. என்னுடைய டிவிட்டர் கணக்கை  யார் ஹேக் செய்தது என்பதை தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் ஆராய்ந்தேன். அதில் ஹேக்கிங் செய்வதை வேலையாகச் செய்யும் ஒரு தனியார் நிறுவனம்தான் இதனை செய்தது தெரியவந்திருக்கிறது.
 
நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரே விஷயம்தான். என்னை விட்டுவிடுங்கள். நான் நடிகர், நடிகைகள் பற்றி எப்போதும்  பேசியதில்லை என சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகளின் அந்த முடிவுக்கு மனைவிதான் காரணம்… அபிஷேக் பச்சன் கருத்து!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

அல்லு அர்ஜுனுக்கு ஹாலிவுட் நடிகரை வில்லனாக்க முயற்சிக்கும் அட்லி.. யார் தெரியுமா?

’கல்லுக்குள் ஈரம்’ நாயகி நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments