Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:41 IST)
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

லியோ திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் லியோ உள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இப்போது லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி லியோ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாராவை கொஞ்சம் விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும்: ரத்தீஸ் குறித்து மாரிதாஸ்

கூலி படத்துக்கு யானை விலை சொல்லும் சன் பிக்சர்ஸ்… தயங்கும் விநியோகஸ்தர்கள்!

நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.. ஆர்த்தி ரவியை மறைமுகமாக தாக்கினாரா கெனிஷா?

அஜித் ஓகே… ஆதிக் நாட் ஓகே… முரண்டு பண்ணும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணிக் கதாநாயகிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments