Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்த விஜய்யின் லியோ!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (08:02 IST)
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக்கதை மற்றும் படத்தின் இணை இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரின் பேச்சு இணையத்தில் கவனத்தையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

இந்நிலையில் இப்போது லியோ திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் லியோ உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments