Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடு விவகாரம் - விஜய் சேதுபதிக்கு வக்கீல் நோட்டீஸ்

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (17:12 IST)
யாருக்கும் அடங்காத கொம்பன் காளையைப் படத்தில் பயன்படுத்தியுள்ளதால், விஜய் சேதுபதி உள்ளிட்ட மூவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


 

 
‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வம், விஜய் சேதுபதியை வைத்து ‘கருப்பன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை, ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த போஸ்டரில், திமிறிவரும் காளையை விஜய் சேதுபதி அடக்குவது போல் உள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த காத்தான் என்பவர், விஜய் சேதுபதி, பன்னீர் செல்வம், ஏ.எம்.ரத்னம் மூவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காரணம், அந்த போஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள கொம்பன் காளை, இவருக்குச் சொந்தமானது. “கொம்பன் காளைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை யாரிடமும் பிடிபடாத என் கொம்பன் காளையை, கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிடிமாடாகக் காட்டியிருப்பது, மன உளைச்சலை உண்டாக்கியிருக்கிறது. கொம்பனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கிய இந்தப் படத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் காத்தான்.

“முறையான அனுமதி பெறாமல் கொம்பனைக் காட்சிப்படுத்தியதற்காக ஒரு வாரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகும் புஷ்பா 2… படக்குழு அறிவிப்பு!

விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

திரையரங்குகளில் கண்டுகொள்ளப் படாத ‘பிளடி பெக்கர்’ ஓடிடி ரிலீஸாவது கவனம் பெறுமா?

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 முதல் பார்வை.. ஷூட்டிங்குக்குத் தயாரான படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments