Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டதா ரத்னகுமார் &லாரன்ஸ் திரைப்படம்?

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (07:51 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட லியோ படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் விஜய்யைப் போற்றியும் ரஜினியைத் தாழ்த்தியும் பேசியது அங்கிருந்தவர்களையே முகம்சுளிக்க வைத்தது.

இதனால் லோகேஷ் இப்போது ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் ரத்னகுமார் கழட்டிவிடப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. அதே போல லோகேஷ் தயாரிப்பில் அவர் லாரன்ஸை வைத்து இயக்க இருந்த படமும் ட்ராப் ஆனது என சொல்லப்பட்டது. ஏனென்றால் தனது ஆதர்சமான ரஜினிகாந்தை கிண்டல் செய்து பேசிய ஒருவரோடு இணைந்து படம் பண்ண தான் விரும்பவில்லை என லாரன்ஸ் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது லோகேஷ் பேசி லாரன்ஸை சமாதானம் செய்துள்ளதாகவும், இந்த படம் தற்போது மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கான அலுவலகம் போடப்பட்டு திரைக்கதைப் பணிகள் நடந்து வருவதாக சொல்லபடுகிறது. இந்த படம் பற்றி வெளியாகியுள்ள மற்றொரு தகவல் என்னவென்றால் இதுவும் ஒரு பேய் படமாம். 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments