Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். ‘வேட்டையன்’ படம் பார்க்க வந்த லதா தகவல்..!

Siva
வியாழன், 10 அக்டோபர் 2024 (14:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இன்று படம் பார்க்க வந்த லதா ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் "ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை முடிந்த உடனே, சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு வேட்டையன் படம் பார்க்க லதா ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் பேரன்கள் ஆகியோர் வந்திருந்தனர். மேலும், அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத், அனிருத் தந்தை தாய் ஆகியோர் வந்திருந்தனர். அதே தியேட்டருக்கு தான் தனுஷ் வேட்டையன் திரைப்படத்தை பார்க்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, "ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments