Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேரத்தில் இடம் மாற்றம், வெறும் 10 பேர் முன்னிலையில் தாலி கட்டிய யோகி பாபு..!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:24 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 
 
இந்நிலையில் நேற்று  பிப்ரவரி 5ஆம் தேதி திருத்தணியில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் முதலில் திருத்தணி கோவிலில் தடபுடலாக நடக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் திருமண இடத்தை மாற்றிய யோகி பாபு செய்யாறில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார். 
 
குறிப்பாக இந்த திருமணத்தில் வெறும் 10 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அவ்வளவு ஏன் மணப்பெண்ணின் அம்மா-அப்பா கூட இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இத்திருமணத்தில் பல ரகசியங்கள் இருப்பதாக வெளியுலக வட்டாரம் பேசிக்கொள்கிறது. இது குறித்து யோகி பாபுவே தெளிவான விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

அடுத்த கட்டுரையில்