Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 10 தோல்விப் படங்களைக் கொடுத்த கங்கனா… அடுத்து வரும் எமர்ஜென்ஸியாவது தப்பிக்குமா?

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (14:33 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.

கங்கனா கதாநாயகியாக நடித்த தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் 3 நாட்களில் 3.8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடைசியாக வெளியான கங்கனாவின் 10 படங்கள் படுமோசமாக தோல்வி அடைந்துள்ளன. இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து எமர்ஜென்ஸி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. அந்த படமாவது அவரின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments