Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் லலித் கதாநாயகனாக நடிக்கும் ‘எஸ்கார்ட்’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

vinoth
புதன், 7 மே 2025 (11:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித். அவர் தன்னுடைய நிறுவனம் சார்பில், அசுரவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட பல்வேறு  படங்களை தயாரித்துள்ளார்.

விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் லலித், அடுத்து தன்னுடைய மகன் அக்‌ஷய் குமாரைக் கதாநாயகனாக ஆக்கியுள்ளார். இந்த படத்துக்கான கதையை   ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் எழுத வெற்றிமாறனின் இணை இயக்குனராக சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இதுவரை 85 சதவீதக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் சிவகங்கையில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லும் காவல் அதிகாரியின் கதைதான் இந்த படம் என சொல்லப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவை மையப்படுத்தி இந்த கதையை தமிழ் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments