பிரபல ஓடிடியில் வெளியாக உள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வெப் சீரிஸ்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:19 IST)
தமிழ் சினிமாவையே உலுக்கிய முதல் கொலை வழக்கு என்றால் அது லஷ்மிகாந்தன் கொலை வழக்குதான் என்று சொல்லலாம்.

பத்திரிக்கையாளரான லஷ்மிகாந்தன் சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பல கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தார். அதில் பல தகவல்கள் அப்பட்டமான பொய் என்று குற்றம் சாட்டப்பட்டன. இந்நிலையில் இவர் மர்மமான முறையில் கொல்லப்பட நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகள் இல்லை என நிருபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் கைதுக்கு பின்னர் இருவரும் சினிமா வாழ்க்கை தேய்பிறையாக சென்று முடிந்தது. இந்நிலையில் இப்போது இந்த லஷ்மிகாந்தனின் கொலையை பற்றி தமிழில் ஒரு வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கவனம் பெற்ற இயக்குனர் சூர்யபிரதாப் இந்த தொடரை இயக்குகிறார்.

சோனி லிவ் தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடரின் உருவாக்கத்தில் இயக்குனர் ஏ எல் விஜய் மேற்பார்வையாளராக பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments