Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐட்டம் டான்ஸும்; லக்ஷ்மி ராமகிருஷ்ணனும்: திருப்தியா கூட இருக்காம்!

ஐட்டம் டான்ஸும்; லக்ஷ்மி ராமகிருஷ்ணனும்: திருப்தியா கூட இருக்காம்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (11:37 IST)
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் குடும்பங்களில் இருக்கும் பிரச்சணைகள், காதல் பிரச்சணைகள், கள்ளக்காதல் பிரச்சணைகள் என பல பிரச்சணைகளை இந்த நிகழ்ச்சி மூலம் பஞ்சாயத்து செய்து வைக்கிறார்.


 
 
இவர் இயக்கிய அம்மணி என்ற ஒரு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் இருப்பதாகவும், அது அவருக்கு திருப்தியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
என்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணனா இப்படினு நினைக்காதிங்க அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?, அம்மணி படம் குறித்து அவர் பேசும் போது, ஐட்டம் டான்ஸுக்கு பெண்களை பயன்படுத்தறது நல்லவா இருக்கு? என் படத்திலேயும் ஒரு ஐட்டம் சாங் இருக்கு. ஆனா, ஆடுறது பொண்ணு இல்லை, ஆண் என்றார்.
 
நம்ம ரோபோ சங்கர் தான் அந்த ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக கூறிய அவர், ஒரு ஆணை ஐட்டம் டான்ஸ் ஆட வச்சுருக்கேன்னு நினைக்கும்போது கொஞ்சம் திருப்தியா கூட இருக்கு என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments