Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சுமி ராய் இனி ராய் லக்ஷ்மி

லட்சுமி ராய் இனி ராய் லக்ஷ்மி
, செவ்வாய், 3 ஜூன் 2014 (10:31 IST)
நடிகை லட்சுமி ராய் தனது பெயரை ராய் லக்ஷ்மி என மாற்றியுள்ளார். இனி வரும் படங்களில் அவரது பெயர் ராய் லக்ஷ்மி என்றே இடம்பெறும்.
கிளாமர் வேடங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் இரும்பு குதிரை படத்தில் ஆக்ஷன் நாயகியாக உருவெடுத்துள்ளார். படத்தில் அவருக்கு பைக் ரேஸர் வேடம். ஆக்ஷன் நாயகிக்குரிய கம்பீரம் லட்சுமி ராய் என்ற பெயரில் இல்லாததால் ராய் லக்ஷ்மி என்று தனது பெயரை அவர் மாற்றியதாக தகவல்.
 
இதுபற்றி அவர் என்ன சொல்கிறார்?
 
லட்சுமி கடவுளின் பெயரை என்னுடைய பெற்றேnர் எனக்கு வைத்தனர். ஆனால் யாரும் என்னை லட்சுமி என்று அழைப்பதில்லை. ராய் என்றுதான் அழைக்கிறார்கள். வீட்டிலும் நான் ராய்தான். என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று முன்பே நான் நினைத்ததுதான். ஒரு வருடத்துக்கு முன்பே இந்த மாற்றத்தை தீர்மானித்துவிட்டேன். அப்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அதனை வெளியே சொல்லவில்லை. இனி என்னுடைய முதல் பெயர் ராய் ஆக இருக்கும். ராயில் ஒரு ஏ வுக்குப் பதில் இரண்டு ஏ சேர்த்திருக்கிறேன். இனி வரும் படங்களில் என்னுடைய பெயர் ராய் லக்ஷ்மி என்றே இடம்பெறும் என்று கூறினார்.
 
லட்சுமி ராயில் இல்லாத ஒரு கம்பீரம் ராய் லக்ஷ்மியில் இருக்கவே செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil