Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சுமி மேனனின் அவதாரம் ஆக.1ல் வெளியாகிறது

லட்சுமி மேனனின் அவதாரம் ஆக.1ல் வெளியாகிறது
, செவ்வாய், 22 ஜூலை 2014 (12:17 IST)
ஆகஸ்ட் 1 இரண்டு வகைகளில் லட்சுமி மேனனுக்கு முக்கியமான நாள். அன்றுதான் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சித்தார்த்துடன் அவர் நடித்த ஜிகர்தண்டா வெளியாகிறது. அதேநாளில் அவரது மலையாளப் படம் அவதாரமும் திரைக்கு வருகிறது.

லட்சுமி மேனன் அறிமுகமானது மலையாளத்தில். அங்கு துண்டு துக்கடா வேடங்களில் ஒரு துணை நடிகை போலதான் இருந்தது அவரது திரை வாழ்க்கை.

மலையாளத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிய சுமார் நடிகைகள் பலரை தமிழ், தெலுங்கு திரையுலகங்கள்தான் லட்சங்களில் சம்பளம் தந்து அவர்களின் மார்க்கெட்டையும், அல்டாப்புகளையும் உயர்த்தின. தமிழில் லட்சுமி மேனனுக்கும் அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

தமிழின் முன்னணி நடிகையான பிறகு, மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் படம் அவதாரம். தாய்மொழியில் நாயகியாக அதுவும் முன்னணி நடிகர் திலீப்புடன் நடித்திருக்கிறார்.

துணை நடிகையாக இருந்த அவர் இப்போதுதான் மலையாளத்தில் நாயகியாகியிருக்கிறார். ஜோ‌ஷி இயக்கியிருக்கும் இந்த அவதாரம் ஆகஸ்ட் 1 திரைக்கு வருகிறது.

மம்முட்டி, மோகன்லாலின் படங்கள் (த்ரிஷ்யம் தவிர்த்து) தொடர்ந்து தோல்வியை தழுவ திலீப் மட்டும் தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறார். அவதாரமும் வெற்றி பெறும் என்பது அனைவரின் நம்பிக்கை. அந்தவகையில் லட்சுமி மேனனுக்கு ஒரு ஹிட் காத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil