Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவைப்பட்டால் யாருக்கும் முத்தம் தருவேன்

தேவைப்பட்டால் யாருக்கும் முத்தம் தருவேன்
, வியாழன், 3 ஏப்ரல் 2014 (12:29 IST)
கதைக்கு தேவைப்பட்டால் எந்த ஹீரோவுடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன் என்றார் லட்சுமி மேனன்.
 
குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்த லட்சுமி மேனன் நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்தார். இந்தப் படத்தில் எப்போதும் தூக்கத்தில் இருக்கும் ஸ்லீப்பிங் டிசார்டர் உள்ள கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். 
இக்கட்டான நேரத்தில் அவரை தூக்கத்திலிருந்து விழிக்க வைக்க லட்சுமிமேனன் அவருக்கு முத்தம் தருவதாக இரண்டு காட்சிகள் வருகின்றன. அதில் ஒன்று நீருக்கடியில் எடுக்கப்பட்டது.
 
கதையின் தேவையை முன்னிறுத்தி இந்தக் காட்சியில் நடிக்க லட்சுமி மேனன் சம்மதித்தார். முத்தக் காட்சி இருப்பதால் படத்துக்கு யுஏ சான்றிதழ்தான் தரப்படும் என சென்சார் கூறியதைத் தொடர்ந்து இந்த முத்தம் பரபரப்பானது. தற்போது படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து லட்சுமி மேனனிடம் கேட்ட போது கதைக்கு முக்கியத்துவம் என்றால் எந்த ஹீரோவுடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன் என்றார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil