Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாபம் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:53 IST)
விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள லாபம் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர். இந்நிலையில் இப்போது தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் விஜய் சேதுபதி நடித்து முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின்னர் மொத்த படமும் முடியும் என சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்புக்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனை நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்சேதுபதி உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments