Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கே தாமதமாக வந்த மாப்பிள்ளை – சுந்தர் சியை கிண்டல் செய்யும் குஷ்பு !

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (11:47 IST)
தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியான சுந்தர் சி குஷ்பு ஆகியோர் தங்கள் திருமண நாளைக் கொண்டாடும் வேளையில் குஷ்பு தனது டிவிட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சுந்தர் சி குஷ்பு ஜோடியும் ஒருவர். இவர்கள் இருவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் முடிந்து தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இன்று 20 வது திருமண நாளைக் கொண்டாடும் வேளையில் குஷ்பு தன் கணவரைக் கேலி செய்யும் விதமாக ஒரு டிவிட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘இல்வாழக்கையில் அடியெடுத்து வைத்து 20 வருடங்களாகிவிட்டன. துன்பம், மகிழ்ச்சி என எல்லாவிதமான சூழல்களையும் ஒன்றாக இருவரும் எதிர்கொண்டுள்ளோம். கடந்த 20 வருடங்களாக நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் புன்னகையுடன் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான் என எண்ணுகிறேன். அதுதான் நீங்கள். என் பலமாக உள்ள உங்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்