Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘புதிய வீடு என்றுதான் சொன்னேன்’… குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:57 IST)
நடிகை குஷ்பு சமீபத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிய நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் மெஹா தொடர் ஒன்றில் நடித்துள்ளார். மீரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த மெஹா சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் உடல் எடையைக் குறைத்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது லண்டனில் உள்ள ஒரு வீட்டில் இருந்து புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். மேலும் அதோடு “ லண்டனில் புதிய வீட்டில் முதல் தேநீர்” என்றும் கேப்ஷன் கொடுக்க, பலரும் குஷ்பு லண்டனில் சொந்தமாக புதிய வீடு ஒன்றை வாங்கிவிட்டார் என நினைத்தனர்.

அதற்கு இப்போது விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு. அதில் “புதிய வீடு என்றுதான் சொன்னேன். சொந்த வீடு என்றா சொன்னேன். சிலர் வாடகை வீடு என்பதைப் பற்றி கேள்வி பட்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments