Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் படமாகும் ‘கும்கி’யின் இரண்டாம் பாகம்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (15:00 IST)
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகம், தாய்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது.


 
 
விக்ரம்பிரபு அறிமுகமான படம் ‘கும்கி’. பிரபு சாலமன் இயக்கிய இந்தப் படத்தில், லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்திருந்தார். காடு மற்றும் யானையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
 
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன். இயக்குநர் லிங்குசாமியின் உறவினரான மதி ஹீரோவாகவும், தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி ஹீரோயினாகவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
 
‘தெகிடி’, ‘சேதுபதி’ படங்களால் பாராட்டப்பட்ட நிவாஸ் கே பிரசன்னா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், தாய்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. யானைகளுக்குப் பெயர்பெற்ற இடம் என்பதால், முக்கியமான காட்சிகளை அங்கு எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments