Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குபேரா படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தருக்கு இவ்வளவு கோடி நஷ்டமா?

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (13:49 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கில் நல்ல வசூலையும், தமிழில் சராசரிக்கும் குறைவான வசூலையும் பெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் இந்த படத்துக்கு வெற்றி விழா நடத்திக் கொண்டாடி வருகின்றனர் படக்குழுவினர். இந்த படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசூலில் பெரும்பகுதி தெலுங்கு பதிப்பில் இருந்துதான் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த படம் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இதனால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்து இந்த படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு சுமார் 15 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments