Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் கொட்டுக்காளி… தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:07 IST)
கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இது குறித்து பல தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் விவாதங்கள் நடந்தன. இதுபோன்ற ஒரு விவாதத்தைதான் தான் உருவாக்க விரும்பியதாக இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் தெரிவித்திருந்தார். ஆனாலும் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் அதன் வசூலைக் கணக்கிட்டால் அது லாபம்தான் என்று சொல்லப்படுகிறது. ரிலீஸுக்குப் பிறகும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது கொட்டுக்காளி திரைப்படம்.

இந்நிலையில் இந்த படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படைப்புகள் ஆக்ரோஷமாகதான் இருக்கும்’… லப்பர் பந்து இயக்குனர் கருத்து!

பிரபல ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் கொட்டுக்காளி… தேதி அறிவிப்பு!

கோட் படத்துல அந்த காட்சில நானும் வருவேன்… எடிட்டிங்ல தூக்கிட்டாங்க –சதீஷ் பகிர்ந்த தகவல்!

உருவாகிறது ‘தி கேரளா ஸ்டோரி 2’: ஹேமா கமிட்டி அறிக்கை தான் கதையா?

மனைவியின் ஓவர் கட்டுப்பாடு… மாமியாரின் நஷ்டக் கணக்கு – ஜெயம் ரவி விவாகரத்து முடிவெடுக்க இவைதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments