Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொம்பனில் சாதியரீதியிலான எதுவும் இல்லை - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை

கொம்பனில் சாதியரீதியிலான எதுவும் இல்லை - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை
, செவ்வாய், 31 மார்ச் 2015 (11:07 IST)
கொம்பன் படத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அறிக்கைப் போர் நடந்துவரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவும் தன் பங்குக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
 
அவ்வறிக்கையில், "ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் கொம்பன் திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
 
இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். யூகத்தின் அடிப்படையில் கொம்பன் திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
 
கொம்பன் திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கொம்பன் திரைப்படம் ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil