Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டபுள் சென்சுரி போடப் போகும் தமிழ் சினிமா

டபுள் சென்சுரி போடப் போகும் தமிழ் சினிமா
, வியாழன், 30 அக்டோபர் 2014 (15:54 IST)
வருடந்தோறும் எண்ணிக்கையில் பெருத்துக் கொண்டே போகிறது தமிழ் சினிமா. சென்ற வருடம் வெளியான நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 160. இந்த வருடம் அக்டோபர் 22 தீபாவளிவரை வெளியான படங்கள்.... மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள், 167.
இந்த எண்ணிக்கை வாரந்தோறும் சரசரவென்று ஏறிக் கொண்டிருக்கிறது. நாளை நான்கு படங்கள் திரைக்கு வருகின்றன. இப்படியேப் போனால் இந்த வருடம் முடிவதற்குள் எண்ணிக்கை 200 -ஐ தொட்டுவிடும்.
 
ஐ, லிங்கா, அனேகன், முனி 3, காக்கிச்சட்டை, ஜெய்ஹிந்த் 2, பூலோகம் போன்ற எதிர்பார்ப்புக்குரிய படங்களுடன் 100 -க்கும் மேற்பட்ட சின்ன பட்ஜெட் படங்களும் இந்த வருடம் ரிலீசாக உள்ளன. 
 
ஐ, லிங்கா வெளியாகும் போது இந்த சின்ன பட்ஜெட் படங்களால் வெளியே தலைகாட்ட முடியாது. என்றாலும் வருட இறுதிக்குள் படங்களின் எண்ணிக்கை 200 -ஐ தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil