Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிவுட்டின் ஈபிஎஸ் யார்? நாளை அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:36 IST)
கோலிவுட்டின் ஈபிஎஸ் யார்? நாளை அறிவிப்பு
நேற்று திடீரென டுவிட்டரில் இணையதளத்தில் கோலிவுட்டின் ஈபிஎஸ் யார்? என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒரு படத்தின் டைட்டிலா அல்லது கோலிவுட்டின் முதல்வரா என்ற வாத விவாதங்கள் டுவிட்டர் பயனாளிகளிடம் இருந்தது 
 
இந்த நிலையில் இந்த புதிருக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கோலிவுட்டின் ஈபிஎஸ் என்பது கோலிவுட்டில் தயாராகி வரும் ’எங்க பாட்டன் சொத்து’ என்ற படத்தின் டைட்டில் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
கோலிவுட்டின் ஈபிஎஸ் யார்? நாளை அறிவிப்பு
வாகை சூடவா, களவாணி, மஞ்சப்பை உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய சற்குணம் இயக்கும் இந்தப் படத்தில் அவரது ஆஸ்தான நடிகர் விமல் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ’எங்க பாட்டன் சொத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைய்டுத்து நேற்று மாலை முதல் கோலிவுட்டின் ஈபிஎஸ் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments