Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் வலியவன்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் வலியவன்
, செவ்வாய், 31 மார்ச் 2015 (09:08 IST)
5. தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
நகுல், தினேஷ் நடித்த இந்தப் படம், சென்ற வார இறுதியில் 2.73 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.12 கோடி.
 

4. இவனுக்கு தண்ணில கண்டம்
சென்ற வாரம் முதலிடத்தைப் பிடித்த படம் இந்த வாரம் நான்காவது இடத்தில். சென்ற வார இறுதியில் இதன் வசூல் 2.75 லட்சங்கள். இதுவரையான சென்னை வசூல் 64.7 லட்சங்கள்.
 
webdunia

3. காக்கி சட்டை
சென்ற வாரம் 3.3 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 4.47 கோடிகளை வசூலித்து அனேகனை முந்தியுள்ளது.

webdunia
 

2. ராஜதந்திரம்
பலரது பாராட்டுகளைப் பெற்ற இப்படம் சென்ற வார இறுதியில் 3.33 லட்சங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 52.1 லட்சங்கள்.
 
webdunia

1. வலியவன்
ஜெய் நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 67.7 லட்சங்கள்.

webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil