Webdunia - Bharat's app for daily news and videos

Install App

175 அடி கட்-அவுட்: கொல்லம் விஜய் ரசிகர்கள் செய்த இந்திய சாதனை

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (21:07 IST)
விஜய் படம் வெளியாகும் தினத்தை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் திருவிழா அன்றே விஜய் படம் வெளிவந்தால் விட்டு வைப்பார்களா?

விஜய் நடித்த சர்கார்' திரைப்படம் கதைத்திருட்டு என்ற சர்ச்சையில் சிக்கினாலும் இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் இந்த படத்திற்காக திரையரங்குகளில் கட் அவுட் வைக்கும் பணியை விஜய் ரசிகர்கள் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் விஜய்க்கு 175 அடி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தவொரு சினிமா நடிகருக்கும்  இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பதால் இதுவொரு சாதனையாக கருதப்படுகிறது.

இந்த கட்-அவுட்டை பார்க்க கொல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments