Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீசுக்கு முன்னரே ரசிகர்களை ஏமாற்றிய 'கொலைகாரன்' படக்குழு

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (21:08 IST)
விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த த்ரில், சஸ்பென்ஸ் படமான 'கொலைகாரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
 
இதனையடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜூன் ரசிகர்கள் இன்று ஆவலுடன் 'கொலைகாரன்' ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் ஓரிரு முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதால் 'கொலைகாரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அறிவிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கியுள்ளார். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments