Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரான கோஹ்லி-அனுஷ்கா திருமண வரவேற்பு பத்திரிகை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (12:12 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்றது. இந்தியாவில் திருமண வரவேற்பு விருந்து நடைபெற இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருந்த அவர்கள், நேற்று முன்தினம் இரவு அவர்களது  திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
 
அனுஷ்கா சர்மாவை கோஹ்லி கரம் பிடித்தார். பலத்த பாதுகாப்புக்கிடையே டஸ்கனியிலுள்ள ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் திருமண வரவேற்பு விருந்திற்கு  திரையுலகத்தினரையும், கிரிக்கெட் வீரர்களையும் அழைக்க உள்ளார்களாம்.
இந்நிலையில் திருமண வரவேற்பு விருந்திற்கான அழைப்பிதழும் தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 21-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரவு 8.30-க்கு மணிக்கு திருமண வரவேற்பு விருந்து நடைபெற உள்ளது. அடுத்து டிசம்பர்  26-ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நடக்கும் எனத் தெரிகிறது. விராட் கோஹ்லி, அனுஷ்கா இருவரும் மும்பை,  வொர்லி பகுதியில் உள்ள புதிய வீட்டில் குடியேர இருக்கிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்