Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமார் படத்துக்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்?

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (18:19 IST)
சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’, மற்ற படங்களைவிட ஒருநாள் முன்கூட்டியே ரிலீஸாக இருக்கிறது.



முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ படம் ஏகப்பட்ட தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டதால், இந்தப் படத்துக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகும் என்றார்கள். ஆனால், சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காததால், ரிலீஸ் செய்ய முடியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் வேறு படங்கள் முந்திக் கொண்டதால், நவம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ‘கொடி வீரன்’ ரிலீஸாகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடித்த ‘திருட்டுப்பயலே 2’ மற்றும் நிவின் பாலி நடித்துள்ள ‘ரிச்சி’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. பொதுவாக, விழாக்காலங்களில்தான் ஒருநாள் முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்வார்கள். அப்படியில்லாமல் சசிகுமார் படத்துக்கு மட்டும் இப்படி விலக்கு கிடைத்திருப்பது, தமிழ் சினிமா வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments