Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (13:36 IST)
சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’ படம், 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார், தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் வருகிற 30ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகுமாரின் அத்தை மகனும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார், கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்திருந்த போலீஸார், அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், ‘கொடி வீரன்’ படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments