Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடுகளில் கோச்சடையான் வசூல் முழு விவரம்

வெளிநாடுகளில் கோச்சடையான் வசூல் முழு விவரம்
, செவ்வாய், 27 மே 2014 (12:26 IST)
மே 23 இந்தியாவில் வெளியான அதேநாள் பல வெளிநாடுகளிலும் கோச்சடையான் ரிலீஸானது. தமிழ்ப் படங்களின் முக்கியமான வெளிநாட்டுச் சந்தையான யுஎஸ்ஏ, யுகே, மலேசியா, கனடா, ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வசூலை கோச்சடையான் பெற்றுள்ளது.
யுஎஸ்ஏ - தமிழ்ப் படங்களின் முக்கிய சந்தையாக யுஎஸ்ஏ மாறி வருகிறது. கமலின் விஸ்வரூபம், ரஜினியின் எந்திரன் போன்றவை இங்கு முதல் மூன்று தினங்களில் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூலித்தன. கோச்சடையான் முதல் மூன்று தினங்களில் 104 திரையிடல்களில் 2.56 கோடிகளை வசூலித்துள்ளது.
 
அதே தேதியில் தெலுங்கு மனம் படமும் வெளியானது. நாகார்ஜுன், அவரது தந்தை மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா ஆகியோர் இணைந்து நடித்த இப்படம் கோச்சடையான் வசூலித்த அதே மூன்று தினங்களில் 108 திரையிடல்களில் 4.96 கோடிகளை வசூலித்துள்ளது. கோச்சடையானைவிட இது ஏறக்கறைய ஒரு மடங்கு அதிகம்.
 
கனடா - கனடாவில் கோச்சடையான் 18 திரையிடல்களில் 32.61 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
யுகே மற்றும் அயர்லாந்த் - தமிழ் திரைப்படங்களின் முக்கியமான சந்தையான இங்கு 34 திரையிடல்களில் 78.31 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
ஆஸ்ட்ரேலியா - இங்கு கோச்சடையானின் வசூல் 13 திரையிடல்களில் 64.73 லட்சங்கள்.
 
மலேசியா - தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் 29 திரையிடல்களில் 92.45 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
மேலே உள்ள நாடுகளில் கோச்சடையானின் மொத்த 3 நாள் வசூல் 4.7 கோடிகள். இங்கு இந்தி மற்றும் தெலுங்கிலும் கோச்சடையான் வெளியாகியுள்ளது. ஆனால் அவற்றின் வசூல் மிகச்சொற்பமே. உதாரணமாக கோச்சடையானின் தமிழ் பதிப்பு மலேசியாவில் 92.45 லட்சங்களை வசூலித்துள்ளது. அதேநேரம் இந்தி பதிப்பின் வசூல் வெறும் 2.92 லட்சங்கள் மட்டுமே.
 
கோச்சடையான் முதல் மூன்று தினங்களில் வெளிநாடுகளில் 12 கோடிகளை வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக நேற்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil